MARC காட்சி

Back
அருள்மிகு ஸ்ரீமருதோதய ஈஸ்வரமுடையார் கோயில்
245 : _ _ |a அருள்மிகு ஸ்ரீமருதோதய ஈஸ்வரமுடையார் கோயில் -
246 : _ _ |a கோயில்பட்டி சிவன் கோயில்
520 : _ _ |a மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் உள்ள ஸ்ரீமருதோதய ஈஸ்வரமுடையார் கோயில் முற்காலச் சோழர்களின் கற்றளியாக விளங்குகிறது. இக்கோயில் முதலாம் இராஜராஜ சோழனின் காலத்திய கல்வெட்டைக் கொண்டுள்ளது. எழில்வாய்ந்த தூண்களையும், சிற்பங்களையும் கொண்டுள்ளது.
653 : _ _ |a விக்கிரமங்கலம், கோயில்பட்டி, மதுரை, சிவன் கோயில், சைவம், சோழர், கற்றளி, இராஜராஜ சோழன், தமிழ்நாடு, சிவாலயங்கள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜராஜசோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது. சோழர் காலக் கற்றளி.
914 : _ _ |a 10.0733266
915 : _ _ |a 78.0737511
916 : _ _ |a ஸ்ரீமருதோதய ஈஸ்வரமுடையார்
922 : _ _ |a வில்வம்
925 : _ _ |a இருகால பூஜை
926 : _ _ |a மகாசிவராத்திரி, கார்த்திகை தீபம்
927 : _ _ |a திருச்சுற்று மாளிகையின் நீண்ட சுவர்ப்பகுதிகளில் கல்வெட்டு காணப்படுகின்றது. இக்கல்வெட்டுகள் சோழர் காலத்தியவை. இக்கொயிலுக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகளைப் பற்றி இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
928 : _ _ |a சுவர்ப் பகுதியில் அனுமன் ஓவியமும், அர்த்தமண்டபத்தின் முகப்பின் இருபுறமும் பாண்டி வீரனும், மீனாட்சியும் ஓவியமாக வரையப்பட்டுள்ளனர். இவ்வோவியங்கள் காலத்தால் பிந்தியவை.
929 : _ _ |a கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் கருவறை விமானத்தின் தேவகோட்டங்களில் தென்முகக்கடவுள், கணபதி, இலிங்கோத்பவர், துர்க்கை ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. தூண்களின மாலாஸ்தானம் எனப்படும் மாலைத் தொங்கல் பகுதிகளில் வெகு கலை நேர்த்தியான புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்ணப்பர், புருஷாமிருகம், பெருமாள், முனிவர்கள், திருவிளக்குகள், ஆடல் மகளிர் ஆகிய சிறிய வடிவ சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கூரைப்பகுதியில் காணப்படும் நாசிக்கூடுகளில் ஆடல்வல்லான், கஜசம்ஹாரமூர்த்தி, பிட்சாடனர், கணபதி, ஆடல் மகள், முருகன், நரசிம்மர், வீணாதரர் ஆகிய திருவுருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. மேலும் கொடுங்கைப் பகுதியின் கீழே வரிசையாக பூதகண வரிசைகள் காட்டப்பட்டுள்ளன. பூதகணங்கள் ஆடல் பாடலோடு, இசைக்கருவிகளை முழக்கியும், ஆனந்தத்தில் களித்துள்ளன. தேவகோட்டங்களின் மேல் பகுதியில் காட்டப்பட்டுள்ள விமானம் அமைப்பில் இருபுறமும் விமானந்தாங்கிகள் அமர்ந்த நிலையில் உள்ளனர்.
932 : _ _ |a இக்கோயில் சோழர்காலக் கற்றளி. இங்கு அமைந்துள்ள தூண்களில் உள்ள மாலைத்தொங்கல் பகுதி புடைப்புச் சிற்பங்கள் எழில் வாய்ந்தவை. மேலும் நாசிகைகளில் அமைந்துள்ள கூடுமுகங்களில் காட்டப்பட்டுள்ள இறைத் திருவுருவங்கள் சிற்றுருவங்களாக அழகுற வடிக்கப்பட்டுள்ளன. இக்கோயில் முகப்பு மண்டபத்தைக் கொண்டதாக விளங்குகின்றது. அதனைக் கடந்து உள்ளே சென்றால் மகாமண்டபம் தூண்களுடன் காணப்படுகின்றது. தூண்களின் சதுரப்பகுதிகளில் தாமரைப் பதக்கங்கள், இறையுருவங்கள் அமைந்துள்ளன. இத்தூண்கள் முற்காலச் சோழர்களின் கலைப்படைப்பாக விளங்குகின்றது. தூண்களின் மேற்பகுதி உறுப்புகளான பலகை, பத்மம் ஆகியன எழிலார்ந்தவை. திருச்சுற்று மாளிகையில் தூண்கள் வரிசையாகக் காட்டப்பட்டுள்ளன. மாளிகையின் சுவர்ப்பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தாங்குதளத்தைத் தொடர்ந்து அமைந்துள்ள சுவர்ப்பகுதியில் காணப்படும் கும்பப்பஞ்சரம் நுணுக்கமான கலை வேலைப்பாடுடையவை. இக்கோயிலின் கருவறை சதுர வடிவத்தில் அமைந்துள்ளது. கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். வாயிலின் இருபுறமும் துவாரபாலகராய் பாண்டி வீரனும் மீனாட்சியும் ஓவியமாய் நிற்கின்றனர்.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a விக்கிரமங்கலம் சமணக் கல்வெட்டு, கருப்பண்ணசாமி கோயில்
935 : _ _ |a விக்கிரமங்கலம் கோயில்பட்டியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 7.30 மணி முதல் 12.30 மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a விக்கிரமங்கலம்
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரை, மேலூர் நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000125
barcode : TVA_TEM_000125
book category : சைவம்
cover images TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_கோயில்-முகப்பு-0002.jpg :
Primary File :

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_கோயில்-தோற்றம்-0001.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_கோயில்-முகப்பு-0002.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_நந்தி-0003.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_முகமண்டபம்-0004.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_முகமண்டபம்-தூண்கள்-0005.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_கருவறை-0006.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_கருவறை-திருச்சுற்று-0007.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_மண்டப-தூண்கள்-0008.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_கணபதி-0009.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_கோட்டம்-0010.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_லிங்கோத்பவர்-0011.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_தட்சிணாமூர்த்தி-0012.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_தட்சிணாமூர்த்தி-0013.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_துர்கை-0014.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_திருச்சுற்று-தூண்-0015.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_அதிட்டானம்-0016.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_தாங்குதளம்-0017.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_பஞ்சாரக்கோட்டம்-0018.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_பூதகணங்கள்-0019.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_பூதகணங்கள்-0020.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_தூண்-அமைப்பு-0021.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_தூண்-மேற்பகுதி-0022.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_தூண்-மேற்பகுதி-0023.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_கணபதி-0024.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_ஆடல்-மங்கை-0025.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_கிருஷ்ணன்-0026.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_கூடுமுகம்-0027.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_முனிவர்-0028.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_முனிவர்-0029.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_பிட்சாடனர்-0030.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_வீணாதரர்-0031.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_விஷ்ணு-0032.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_முனிவர்-0033.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_அனுமன்-0034.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_கூடுமுகம்-0035.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_மகிசாசுரமர்த்தினி-0036.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_கஜசம்காரமூர்த்தி-0037.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_முருகன்-0038.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_கல்வெட்டு-0039.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_கல்வெட்டு-0040.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_புருஷாமிருகம்-0041.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_நரசிம்மர்-0042.jpg

TVA_TEM_000125/TVA_TEM_000125_கோயில்பட்டி_கல்வெட்டு-0043.jpg